சித்திரம் பேசுதடி – அஞ்சாதே மற்றும் மிஷ்கின்

மிஷ்கின் திடீரென்று வந்து தனக்கென தனியிடத்தை பிடித்து தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டுள்ளவர். இங்கு திடீரென்று என்று கூறப்படுவது முதல் படத்திலேயே கவனத்தை திசை திருப்பியவர் என்றதால். மிஷ்கினின் படங்களில்(இதுவரை இரண்டு தான்) சில விஷயங்களை நாம் எளிதில் கவனிக்கலாம். மிஷ்கினின் படங்களில் எதார்த்தம் என்பது மிகக்குறைவாக இருக்கும். நடிகர்களின் நடிப்பில் ஒரு புதுவிதமான் நாடகத்தனம் … Continue reading

கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு புதுசாயம் பூசுகின்றது. சாயங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அழிபட்டு அடுத்தநாளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது ஊர். ஆனாலும் கிரிவலப்பாதை எங்கும் குப்பையையும் கற்பூர மணத்தையும் அப்படியே விட்டுவிட்டு. திருவண்ணாமலையில் இருப்போருக்கு கிரிவலநாள் ஒரு அரசியல் ஊர்வலம் நடக்கும் நாள் போல, அவ்வளவு இடையூறுகள். ஆனால் மக்கள் அழகாக புதிய வழிகளை … Continue reading

ட்விட்டரில் நான் எழுதிய கதைகள்

காசியில் கங்கையில் குளித்து அனைத்துப் பாவங்களையும் நீக்கிக்கொண்டு கரை ஏறும்போது, ஓரமாக முழு ஈரமாக நின்றிருந்தாள் ஒரு அழகிய பெண் என்னைப்பார்த்துக்கொண்டே டைப்படித்த அமுதா என் டைப்ரைட்டருக்கருகே விட்டுச்சென்ற தாளில், ASDFGF;LKJHJ தனியாய் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது துணையாரும் இல்லையே என்று வருத்தப்பட்ட கணத்தில், தட்டில் இருந்து மறைந்தது ஒரு இட்லி இப்படி இரவெல்லாம் தூங்கவிடாமல் மேலே … Continue reading

ப்ளாகர் முதல் வேர்ட்பிரஸ் வரை

நீண்ட காலத்திற்கு முன் சொன்னது போல, இந்த வலைத்தளத்தை லேசாக பெயர்த்து சொந்த தளத்தில் வேர்ட்பிரஸில் நிறுவி உள்ளேன். இன்னும் ஆரம்பகட்ட பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் புது இட குழப்பங்கள் தீரவில்லை. எனவே சில பல குழப்பங்கள் சில நாட்கள் புதிய வலைத்தளத்தில் இருக்கலாம். கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க விரும்பாததாலும், … Continue reading

இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு குறும்படம்: தாயம்

குறும்படம் என்பது தமிழில் சோகமயமாகவோ அல்லது மெதுவான நகர்வுகளோடும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிகளுடனே பெரும்பாலும் காணப்படும். அதை தகர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி முடிக்கின்றது தாயம். அதில் சில சமூக செய்திகளும் இருப்பது ஒரு ப்ளஸ். தாயம் என்ற இந்த குறும்படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி. … Continue reading

மன்னார்குடி டேஸ்

மன்னார்குடி ஒரு நகரத்திற்கு சற்றும் குறைவின்றி எல்லா வசதிகளுடன், கிராமிய மணத்துடன் இருக்கும் ஒரு திருவாரூர் மாவட்ட ஊர். என்னதான் திருவாரூர் என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனதில் இன்னும் தஞ்சாவூர்தான் விருப்பமான ஊர். அதிகாலையில் எழுந்துவிடும் ஊர். இன்னமும் மாட்டுவண்டிகளின் ஆதிக்கம் ரோட்டில் அதிகம் இருக்கும். அதுவும் கொம்பில்லாத ஒருவகை மாடுகள் இங்கு வண்டி இழுக்க … Continue reading

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு ஏன் ஓட்டுபோடக்கூடாது?

காங்கிரஸ் அரசு ஸ்திரமான ஆட்சிமையத்தை கொண்டிருக்கவில்லை. மன்மோகன்சிங் பிரதமராக முன்னிருத்தப்பட்டாலும், சோனியா குடும்பமே ஆட்சி செய்தது. (சீனா ஒலிம்பிக் போட்டியின் போது சோனியாவிற்கு அழைப்பு அனுப்பியது ஆனால் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பவில்லை) அமெரிக்காவின் கூலியாக செயல்பட்டது. இந்தியாவின் தொலைநோக்கு திட்டங்களுக்கு இது உதவுவதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், உலகநாடுகள் மத்தியில் இது ஒரு தலைகுனிவே. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் … Continue reading

நானும் பதிவிடுகிறேன்

அதீத வேலையும், தேர்தல் பொருட்டு உடையும் பிம்பங்களும், வாக்குறுதிகளும் மனச்சோர்வை அளிக்கின்றன. கையாலாகாத்தனமும் வோட்டுகளின் பலவீனமும் இருக்கும்வரை இந்தியா வளரப்போவதில்லை. இதைப்பற்றி எழுதியும் ஒரு பலனும் இல்லை. எழுதுவது ஏன் என்ற கேள்வியும், எதை எழுதுவது என்பது பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். பலர் சிறப்பாக எழுதுகின்றனர் அதை படித்துக்கொண்டிருப்பதே இன்பம் அளிக்கின்றது. சமீபத்தில் பார்த்த … Continue reading

படித்தது – ஜஸ்டிஸ் ஜகன்னாதன் – தேவன்

முழு கதையும் ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை மறு&குறுக்குவிசாரணைகள்தான். இப்படி ஒரு கதையை படித்துவிடமுடியுமா என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்த என்னை, வெகு சில பக்கங்களுக்குள் முடிந்துவைத்துக்கொண்டது இந்தக்கதை. ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மீண்டும் உடல் தேறிவரும்போது மர்ம‌மான முறையில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். இங்கு சமய சந்தர்ப்பங்கள் வீட்டின் பெரியமாப்பிள்ளைக்கு பாதகமாக இருக்கின்றது. … Continue reading

படித்தது: கொலையுதிர்காலம் -‍ சுஜாதா

சுஜாதாவின எழுத்துநடையில் சாதாரண லீவ் லெட்டர் எழுதினாலே சுவையாக இருக்கும். அதுவும் மர்மநாவல் என்றால் கேட்கவேண்டுமா? சுஜாதா ஒருகாலகட்டத்தில் நிறைய மர்மக்கதைகள் எழுதினார், ஆனாலும் அவர் அந்த கதைகளுக்காக மக்கள் மனதில் நிலைத்திருக்கவிரும்பவில்லை என்று தெரிகின்றது. அவரது காவியக்கதாபாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். இந்த பெயர்களை கடக்காமல் ஒரு வாசகன் உருவாக வாய்ப்பில்லை. கணேஷ் வசந்த் … Continue reading