நண்பர் ஒருவர் அருகில் உள்ள தீவுக்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்வதைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்…..
-
Recent Posts
-
Recent Comments
Archives
நண்பர் ஒருவர் அருகில் உள்ள தீவுக்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்வதைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்…..
மேகத்திற்கு மேல் சென்றுகொண்டிருந்தபோது
வெகு கீழே ஒரு புள்ளியைப்பார்த்தேன்
புள்ளி கடலின் நடுவில் இருந்ததாலும்,
மேகங்கள் சற்று இடைவெளி விட்டிருந்ததாலும்,
என்னால் அந்த புள்ளியைப்பார்க்க முடிந்தது.
புள்ளி கப்பல் என்று அழைக்கப்படுவதோ
புள்ளிக்குள் மனிதர்கள் இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதோ
என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை
நாத்திகர்களுக்கு ஆத்திகர்களின் கடவுள் போல
புள்ளி என்பதால் மேகம் எளிதாக மறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது
அல்லது நான் மேகத்தைத்தாண்டி சென்றுகொண்டிருந்தேன்
சூரியன் எஃப்.எம்மை அனைவரும் மாய்ந்து மாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தபோது, கல்லூரிகாலத்தில் நாங்கள் மயங்கிக்கிடந்தது ரேடியோ மிர்ச்சிக்கு. திருவண்ணாமலையில் அப்போது எஃப்.எம் சரியாக கிடைக்காது. வெயில் வரும்வரை நன்றாக எடுக்கும். இதற்காக தனி ஆண்டனாவெல்லாம் பொருத்தி ஓரளவுக்கு ஒப்பேற்றிக்கொண்டிருந்தோம்.
சூரியன் எஃப்.எம் சன் மியூசிக்போல எப்போதும் தொலைபேசிக்கொண்டே இருந்தனர்(கின்றனர்). அது ஒரு எரிச்சல் தரும் ஒரு அனுபவம். எ-டு: கீட்டு மாமா சூசி மாமி, சின்ன மாப்ளே பெரிய மாப்ளே… ஆனால் கோவை சூரியன் எஃப்.எம்மில் லக்ஷ்மிநாராயணனும், சென்னை சூரியன் எஃப்.எம்மில் [...]
செய்வதற்கு ஏதுமற்று இருந்த ஒரு ஞாயிறு மதியம் The Boat That Rocked படத்தை பார்க்க நேர்ந்தது. 1960களில் Rock n Roll, POP இசைக்கு BBCயில் இருந்த தட்டுப்பாட்டை(தினமும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவு) எதிர்த்து இசை மீதான மோகத்தால் திருட்டுத்தனமாக பல வானொலி நிலையங்கள் செயல்பட்டன. அதைப்போன்ற கற்பனையான ரேடியோ ராக் என்ற கப்பல்மீது இருந்து செயல்படும் வானொலி நிலையம் பற்றிய கதை இது.
அந்த காலத்தில் இத்தகைய வானொலி நிலையங்களுக்கும் அரசுக்கும் நிகழ்ந்த போரை கற்பனை [...]
ட்விட்டர் பற்றி நிறைய எழுதிப்பட்டுவிட்டது. ஆனாலும் சிலருக்கு அதை உபயோகிப்பது சற்று கடினமாக இருக்கிறது. அதனால் ஒரு குட்டி அறிமுகம்.
ட்விட்டர் ஒரு மைக்ரோ ப்ளாக், நாம் நினைப்பதை 140 எழுத்துகளுக்குள் சொல்ல ஒரு தளம். அந்த 140 எழுத்துக்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக அந்த 140 எழுத்துகள் “இப்போது நீ என்ன செய்கிறாய்?” என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டு ட்வீட்.
”இந்த மழைத்தொல்ல தாங்க முடியல யாராவது ஒரு தம் கடன் கொடுங்களேன்”
இது உங்களது [...]
உலகம் அழிந்தால் இப்படித்தான் அழியும் என்று மிரட்டலாக காண்பித்த விஷயத்தில் இந்த படம் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம்.
கொடுத்த வேலையை நேரத்தில் செய்து முடிப்பது என் ஜீனிலேயே இல்லை. ஏன் என் குடும்ப ஜீனிலேயே இல்லை. என் அப்பாவிடம் இருந்து கடன் வாங்கிய வரிகள். ஒரு வேலை வந்தவுடன் மனது உடனே திட்டங்கள் தீட்டும் ஆனால் திட்டங்கள் வெற்றி அடைந்த வரலாறு குறைவு. Tom, Jerry-ஐ எப்போதாவது வெல்வது போல….
Review of the movie Modhi vilaiyadu.
prabha-election-disappoint