Category Archives: Poem

கடலின் நடுவில் ஒரு புள்ளி

மேகத்திற்கு மேல் சென்றுகொண்டிருந்தபோது
வெகு கீழே ஒரு புள்ளியைப்பார்த்தேன்
புள்ளி கடலின் நடுவில் இருந்ததாலும்,
மேகங்கள் சற்று இடைவெளி விட்டிருந்ததாலும்,
என்னால் அந்த புள்ளியைப்பார்க்க முடிந்தது.
புள்ளி கப்பல் என்று அழைக்கப்படுவதோ
புள்ளிக்குள் மனிதர்கள் இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதோ
என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை
நாத்திகர்களுக்கு ஆத்திகர்களின் கடவுள் போல‌
புள்ளி என்பதால் மேகம் எளிதாக மறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது
அல்லது நான் மேகத்தைத்தாண்டி சென்றுகொண்டிருந்தேன்

Posted in Poem | Tagged , | Leave a comment

பின்நவீனத்துவப் பிதற்றல்

பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு
வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.நன்றி திரு.பாதசாரி
மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது
எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் [...]

Posted in Poem | Tagged , | 4 Comments

வலி

வார்த்தைகள் தொடங்கும் அந்த ஆரம்பப்புள்ளியில் வலிக்கிறதுஎனக்கும் சற்று புதிதாகத்தான் இருக்கிறது இந்த வலி.மருத்துவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் மீண்டும் வலிக்கிறது
எல்லாம் ஆரம்பித்தது இந்த வார்த்தைகளை எண்ண ஆரம்பித்ததும்தான்வார்த்தைகளின் எண்ணிக்கையும் ஒரு வார்த்தையாகி வலியைக்கூட்டுகின்றதுவார்த்தைகளை குறைத்துத்தான் ஆகவேண்டும் போல இருக்கின்றது
எப்படி இருந்தாலும் வலி என்ற வார்த்தைக்குள் இருந்து துவங்கிவிடும் மீண்டுமொரு வலி

Posted in Poem | Tagged | 6 Comments