By | Published:
August 28, 2008
மீண்டும் ஒரு IT fair சிங்கப்பூர் சன்டெக்கில் 28.08.2008 முதல் 31.08.2008 வரை நடைபெறுகின்றது. வழக்கம்போல் 1,2,3,4 மற்றும் 6 வது வளாகங்களில் கம்பெனிகள் கடைவிரித்துள்ளனர். பொதுவாக இவை வெறும் Crowd-pullers தான். பெரிய தள்ளுபடியோ சலுகைகளோ எதிர்பார்க்க முடியாது. பல கம்பெனிகள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆப்பிள் தனது ஐபாட்களுக்கு 20% கழிவு தரப்போவதாக அறிவித்துள்ளது. (கடை எண்கள்: 8108,8236,6138)
ஜி.பி.எஸ் சமாச்சாரங்கள்(சிங்கப்பூருக்கு சுத்தமாக தேவை இல்லாத ஒன்று) இம்முறை பல சலுகைகளுடன் [...]
Posted in Uncategorized | Tagged சிங்கை |
By | Published:
August 27, 2008
சிங்கப்பூரின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான Nanyang Technical University(NTU) -கு திரு. அப்துல்கலாம் 26.08.2008 அன்று வருகை புரிந்தார். அங்கு வந்த அவரை மாணவ மாணவியர் சூழ்ந்து முற்றுகையிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி சந்திக்காத காவல்துறை கடைசியில் செல்லமாக கூட்டத்தைக்கலைத்தனர்.
பல்கலைகழக மாணவ மாணவிகள் மற்றுமன்றி ஏராளமான பொதுமக்களும்(நான் இந்த Category) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் அதிபர் எஸ் ஆர் நாதன் தலைமை தாங்கினார்.கலாம் உட்பட மேலும் 3 பேருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. கலாம் [...]
Posted in Uncategorized | Tagged சிங்கை |
By | Published:
August 21, 2008
நான் படித்த புனித வளனார் மேல்நிலை பள்ளி(மெயின்) விளையாட்டிற்கு பெயர் போன பள்ளி. நான் 1ம் வகுப்பு சேர்ந்த போதே(1989) பெரிய மைதானம் இருந்தது. சில வருடங்களில் அங்கு கேலரி கட்டப்பட்டது. விளையாட்டையும் எங்கள் பள்ளியையும் பிரித்துப்பார்ப்பதென்பது இயலாத காரியம்.
அந்த மைதானம் எத்தனை வியர்வைத்துளிகளையும் இரத்ததுளிகளையும் சந்தித்திருக்கும் என்பது அங்கு படித்து வளர்ந்தவர்களுக்குத்தான் புரியும். விளையாட்டை படிப்பாகவும், படிப்பை விளையாட்டாய் கொண்டவர்களும் காணப்படும் பகுதி அது.
நாளடைவில்(வருடடைவில்) மைதானத்தில் அத்லெட் ட்ராக் போடப்பட்டு அங்கு கருப்பு நிற மண்ணால் [...]
Posted in Uncategorized | Tagged அனுபவம், கடலூர், செயின்ட் ஜோசஃப் |
By | Published:
August 3, 2008
டிஸ்கி:அதிக எதிர்பார்ப்பின்றி என்னைப்போல் தியேட்டர் மாறி நுழைந்து பாருங்கள்.
கோலாலம்பூர் ட்வின் டவர்ஸில் டார்க் நைட் படம் பார்க்க சென்ற நான், கடைசி நேரத்தில் குட்டியான தலைவரின் கட் அவுட் பார்த்தபின் தான் தெரிய வந்தது குசேலன் படம் அங்கு ஓடிக்கொண்டிருப்பது. சரி தலைவர் படத்தை முதல் நாளே பார்த்து பீற்றிக்கொள்ளலாம் என்று நுழைந்தும் விட்டேன்.
டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. [...]
Posted in Uncategorized | Tagged சினிமா |