Monthly Archives: October 2008

தமிழ்மணத்தின் ராசி நன்றாக வொர்க் அவுட் ஆகின்றது

தமிழ்மணத்தின் ராசி நன்றாக வொர்க் அவுட் ஆகின்றது. சென்ற பதிவின் தலைப்பில் வெறும் ஜட்டி என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக ஹிட் காட்டுத்தனமாக ஏறிவிட்டது.
இனி கொஞ்சம் உஷாராக தலைப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எந்த பதிவை ரசித்தார்கள் என்பதே முக்கியம் என்று நினைக்கிறேன்.
வர வர எதை பதிவிடுவது என்பது மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. கொஞ்ச நாளைக்கு தொழிற்நுட்பம் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவுகளை/மொழிபெயர்ப்புகளை இடலாம் என்று எண்ணியுள்ளேன்.
பதிவர் வட்டம் என்பது இன்னமும் [...]

Posted in Uncategorized | Tagged , , | 5 Comments

சைஸ் தெரியாமல் ஜட்டி வாங்கப்போன கதை

Content is no longer available…

Posted in Uncategorized | Tagged | 3 Comments

நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் ‍- நினைத்தாலே இனிக்கும்

சிங்கப்பூர் வந்து நீண்ட நாட்கள் ஆனபின் திடீரென்று பழைய தமிழ் படங்களில் சிங்கை எப்படி இருந்தது என்று பார்க்க ஆவலுடன், பல படங்களையும் பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருந்து இப்பாடலை கேட்டேன்.
நிறைய முறை கேட்ட பாடல் தான், இருந்தாலும் அப்பாடலின் இசையும் பாடிய விதமும் துள்ளல் ரகம். எம்.எஸ்.வி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
எஸ்.பி.பியும் தன் பங்கிற்கு பாடலை அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் விதம் அருமை. குறிப்பாக, “மன்மதன் வந்தானா, [...]

Posted in Uncategorized | Tagged , | 2 Comments

ராஸ‌லீலா, தன் பொக்கிஷத்தை விற்ற துறவி புத்தகங்கள்

இந்த முறை இந்திய பயணத்தின்போது(சிங்கப்பூரில் இருந்து) பல திட்டங்களோடு சென்றிருந்தேன். ஆனால் இறுதியில் ப்ராஜெக்டில் இருந்து வேலை வந்து விட்டதால், வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே மாட்டிக்கொண்டேன். ஆற்காட்டார் புண்ணியத்தில் கரண்ட் வேறு இல்லாத‌தால் ஏரியா விட்டு ஏரியா மாறி சென்று கொண்டிருந்தேன்(ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு நேரத்தில் கரண்ட் கட் செய்யப்படுவது மரபு)
இப்படிப்பட்ட நேரத்தில் நீண்ட நாட்களாக படிக்க எண்ணியிருந்த புத்தகங்களை படிக்க துவங்கினேன். சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் புத்தகக்கடையில் தமிழுக்கான பகுதி [...]

Posted in Uncategorized | Tagged , | 4 Comments

வெண்ணிலா கபடி குழு, வால் நட்சத்திரம் இசைக்கண்ணோட்டம்

வால் நட்சத்திரம் பாடல்கள்ஏற்கனவே நாம் கேட்டு ரசித்த, ஹிந்தி பாடல்களின் தமிழாக்கம் தான்.
அதே ஷங்கர் மஹாதேவன் பாடல்கள். என்ன இந்த முறை பாடல் வரிகள் அவருக்கு சுதந்திரத்தை சற்று குறைத்தது போல் தோன்றுகின்றது. குறிப்பாக “இரயில் பயணங்கள்” பாடலில் என் அம்மா வரிகள் வரும் இடங்கள், ஹிந்தியின் “மேரி மா” போல் அழுத்தமாக இல்லாதது போல் ஒரு உணர்வு.
எனக்கு இந்த முறை பிடித்த பாடல், “பம்பம் பாடு” பாடல், அமீர்கானின் அதே ஆரம்ப பாடலை வைத்துக்கொண்டு அட்டகாசமாக [...]

Posted in Uncategorized | Tagged | Leave a comment