By கிஷோர் | Published:
February 27, 2009
ஒருமுறை கல்லூரியில் ஒரு எழுத்தாள லெக்சரர், அனைவரிடமும் சும்மா ஏதாவது கேட்டுக்கொண்டு வர, எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் என்று சொல்லியிராவிட்டால் சுஜாதாவுக்கு இப்படி நான் எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
புத்தகம் படிக்க பிடிக்கும் என்றதும், பிடித்த எழுத்தாளர் யார் என்றார்? சட்டென்று நினைவில் யாரும் வராததால் அப்படி எல்லாம் யாருமில்லை என்று மழுப்பினேன். உடனே இந்த சுஜாதா மாதிரி என்று இழுத்தார். உடனே அவசரமாக ஆமாம் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.
தீர்மானம் செய்தபின் ரசிகனாவது [...]
Posted in Books, Creation | Tagged சுஜாதா |
By கிஷோர் | Published:
February 21, 2009
பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு
வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.நன்றி திரு.பாதசாரி
மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது
எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் [...]
By கிஷோர் | Published:
February 20, 2009
அய்யா நீங்க ஒருத்தராச்சும் எங்கள புரிஞ்சிகிட்டு இருக்கீங்க (உள்குத்துகள் இருந்தாலும்).ரொம்ப நன்றிங்க அய்யா.
தமிழ்நாட்டுல வந்து தேர்தல்ல நில்லுங்க, உங்களை 2011 முதல்வர் ஆக்குகிறோம்.
உங்க அளவு கூட துணிச்சல் இல்லாதவனுங்க எல்லாம் அரசியல்ல இருக்கானுங்க.
Posted in Politics | Tagged இலங்கை |
By கிஷோர் | Published:
February 18, 2009
என்னங்கடா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
நீங்கள் காட்டவில்லை என்றால் உலகம் பார்க்காதா? இல்லை விஷயம் வெளியில் வராதா?
என் இத்தனை கடுப்பிற்கு காரணம், இந்திய செய்திகளை பற்றி அறிய இருக்கும் முக்கிய ஆங்கில ஊடகங்கள், NDTV and CNN IBN. இந்த இரண்டு இணையதளங்களையும் மட்டுமே அடிக்கடி பார்த்து செய்திகளை உடனடுக்குடன் தெரிந்துகொண்டு இருக்கும் எனக்கு, இலங்கையில் இறந்த மக்கள் பற்றிய படமோ செய்தியோ ஒன்றும் வரவில்லை.
சரி ஒரு தேடுதல் செய்து தான் பார்ப்போம் என்று பார்த்தால், அதிலும் அப்படித்தான். ஒரு [...]
By | Published:
February 16, 2009
தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்துதாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம்உடைமையும் இழந்தோம்உணர்வை இழக்கலாமா?உணர்வை கொடுத்துஉயிராய் வளர்த்தகனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம்விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?உன் நெஞ்சம் முழுவதும் வீரம்இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
உரிமை இழந்தோம்உடைமையும் இழந்தோம்உணர்வை இழக்கலாமா?உணர்வை கொடுத்துஉயிராய் வளர்த்தகனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?வாழ்வை சுமையென நினைத்துதாயின் கனவை மிதிக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம்விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?உன் நெஞ்சம் [...]
Posted in Politics | Tagged இலங்கை |