By கிஷோர் | Published:
March 24, 2009
அதீத வேலையும், தேர்தல் பொருட்டு உடையும் பிம்பங்களும், வாக்குறுதிகளும் மனச்சோர்வை அளிக்கின்றன. கையாலாகாத்தனமும் வோட்டுகளின் பலவீனமும் இருக்கும்வரை இந்தியா வளரப்போவதில்லை. இதைப்பற்றி எழுதியும் ஒரு பலனும் இல்லை.
எழுதுவது ஏன் என்ற கேள்வியும், எதை எழுதுவது என்பது பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். பலர் சிறப்பாக எழுதுகின்றனர் அதை படித்துக்கொண்டிருப்பதே இன்பம் அளிக்கின்றது.
சமீபத்தில் பார்த்த படங்களில் டில்லி 6, வெண்ணிலா கபடி குழு, லாடம் நன்றாக இருந்தன. லாடம் நல்ல படம் என்று சொல்லமுடியாத வரிசை ஆனால், சார்மிக்காகவும் [...]
Posted in Experience | Tagged புலம்பல் |
By கிஷோர் | Published:
March 9, 2009
முழு கதையும் ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை மறு&குறுக்குவிசாரணைகள்தான். இப்படி ஒரு கதையை படித்துவிடமுடியுமா என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்த என்னை, வெகு சில பக்கங்களுக்குள் முடிந்துவைத்துக்கொண்டது இந்தக்கதை.
ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மீண்டும் உடல் தேறிவரும்போது மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். இங்கு சமய சந்தர்ப்பங்கள் வீட்டின் பெரியமாப்பிள்ளைக்கு பாதகமாக இருக்கின்றது.
அரசுதரப்பு வக்கீலுக்கு மாப்பிள்ளையை தூக்குக்கு அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையை வெகு சுலபமாக உருவாக்குகின்றனர் அரசுதரப்பு சாட்சிகள்.
ஆனால் எதிர்தரப்பு குற்றவாளி தரப்பு வக்கீல் அனைத்து [...]
Posted in Books | Tagged படித்தது, புத்தகம் |
By கிஷோர் | Published:
March 5, 2009
சுஜாதாவின எழுத்துநடையில் சாதாரண லீவ் லெட்டர் எழுதினாலே சுவையாக இருக்கும். அதுவும் மர்மநாவல் என்றால் கேட்கவேண்டுமா?
சுஜாதா ஒருகாலகட்டத்தில் நிறைய மர்மக்கதைகள் எழுதினார், ஆனாலும் அவர் அந்த கதைகளுக்காக மக்கள் மனதில் நிலைத்திருக்கவிரும்பவில்லை என்று தெரிகின்றது. அவரது காவியக்கதாபாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். இந்த பெயர்களை கடக்காமல் ஒரு வாசகன் உருவாக வாய்ப்பில்லை.
கணேஷ் வசந்த் பற்றி இங்கு சொல்லப்போவதில்லை, அவர்களைப்பற்றி தனியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த நாவலைப்போல் இவர்கள் இருவரும் அடி வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அடி [...]
Posted in Books | Tagged புத்தகம் |
By கிஷோர் | Published:
March 4, 2009
தமிழில் உள்ள வழக்கொழிந்த சொற்களை எழுதச்சொன்னார் ஜோதிபாரதி. நண்பரின் விருப்பத்திற்கிணங்க அதை சற்று அலசலாம் என்று எண்ணுகின்றேன்.
எனது 24 வருடங்களுக்குள் வழக்கொழிந்துபோன வார்த்தைகளை தேடுவதென்பது சற்று கடினம்தான். ஏனென்றால் என்னை அறியாமல் நானும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
நான் பிறந்தது மட்டும் தஞ்சை மாவட்டம், வளர்ந்தது கடலூர் மாவட்டம். அடிக்கடி தஞ்சையும் சென்று வருவதால் இயல்பிலேயே எனக்கு சில குழப்பங்கள் உண்டு. சிறு வயதுவரை ஆத்தா என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூரின் ஆதிக்கத்தால், ஆயா என்று கூப்பிட ஆரம்பித்தேன். [...]
Posted in Creation | Tagged தமிழ் |