அசைன்மென்ட் – சர்வேசன்500 – ‘நச்’னு ஒரு கதை 2009

கொடுத்த வேலையை நேரத்தில் செய்து முடிப்பது என் ஜீனிலேயே இல்லை. ஏன் என் குடும்ப ஜீனிலேயே இல்லை. என் அப்பாவிடம் இருந்து கடன் வாங்கிய வரிகள். ஒரு வேலை வந்தவுடன் மனது உடனே திட்டங்கள் தீட்டும் ஆனால் திட்டங்கள் வெற்றி அடைந்த வரலாறு குறைவு. Tom, Jerry-ஐ எப்போதாவது வெல்வது போல.

ஒவ்வொரு வருட டைரியிலும் முதலில் எழுதுவது வேலையை நேரத்தில் செய்வது பற்றிய வருடத்தீர்மானம்தான். ஆனாலும் கொஞ்சநாளில் டைரி மூலைக்கு சென்றுவிடும், வருடத்தீர்மானத்தையும் அழைத்துக்கொண்டு.

இம்முறை இந்த அசைன்மென்ட் முக்கியமானது. என் மானம் இதில்தான் இருக்கிறது. சென்றமுறை கொடுத்த அசைன்மென்ட்டை குறித்தநேரத்தில் முடிக்கமுடியாமல் போய் விஷயம் விவகாரம் ஆகி மேலிடம் எல்லாம் சென்றாகிவிட்டது. அவமானம் பிடுங்கித்தின்றது. இந்த சதீஷ் வேறு கிண்டலாக(உறுதியாக கிண்டல் என்று சொல்லமுடியாது) “அடுத்த முறை ஏதாவது ஹெல்ப் வேண்டுமா?” என்று கேட்டுத்தொலைந்தான். ரேகா சரியான நேரத்தில் அசைன்மென்ட்டை முடித்துவிட்டு முறைத்துக்கொண்டு இருந்தாள்.

இந்தமுறை முடித்திருக்கலாம்தான். திட்டம்கூட பிரமாதமாக போட்டிருந்தேன். முதல்நாளே கால்வாசியை முடித்துவிடவேண்டும். பிறகு படிப்படியாக அழகாக சிறப்பாக முடிக்கவேண்டும். எல்லாம் திட்டம்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக… என்ன காரணம் வந்திருந்தால் என்ன? காரணம் எல்லாம் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை, எல்லாம் சென்ற அசைன்மென்ட் செய்தவேலை. வீட்டில் ஒன்றும் பெரிய வேலை இல்லை. எனக்கெப்போதும் வீட்டில் வேலை கொடுப்பதில்லை. என் வேலையை ஒழுங்காக பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். ஆனால் அதுவே பெரிய விஷயம்.

12 மணிநேரம். காலை 9 மணி ஆக இன்னும் 12 மணி நேரம் மட்டுமே இருக்கின்றன. இப்போது ஆரம்பித்தால்கூட இரவு 12 மணிக்குள் முடித்துவிடலாம். சரி இதை யோசிக்கும் நேரத்தில் முடிக்க முயற்சி செய்கிறேன்.

வேலை இல்லாத நாட்களில் கடிகாரத்தின் வேகத்தை பார்த்ததில்லை. ஆனால் இன்று வேகமாக நகர்ந்திருக்கின்றது. 2 தோசைகளை சாப்பிட எனக்கு 30 நிமிடங்கள் பிடிக்கின்றது என்பதே என்னால் இன்றுதான் உணர முடிந்தது. அம்மா சிறுவயதில் இருந்து சொல்லுவாள், ‘இவ்வளவு நேரம் நீ சாப்பிட்டுக்கிட்டு இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு சமைக்க நேரமே கிடைக்காது’.

மணி 11, தூக்கம் கண்களை சுழற்றத்துவங்கியது. வெறும் 10 சதவீதம் கூட முடிக்கவில்லை. நாளை என் கண்முன் தெரிந்தது. அதுவும் தெளிவின்றி தூக்கம் மறைத்து கலங்கலாய் தெரிந்தது. நாளைக்கும் எப்படியாவது சமாளித்து இன்னும் நேரம் கேட்கவேண்டும் என்ற யோசனையுடன் தூங்கிப்போயிருந்தாள்.

காலை 8 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்து பேருந்தில் ஏறிய பின்தான் அசைன்மென்ட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. ஆக இன்று சமாளிப்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கடினமானதாக இருக்கும்.

பேருந்தில் இருந்து நேரே இறங்கிச்செல்லும்போதே தூரத்தில் என் 4‍-A வகுப்பறை எனக்கு எமன் போல் காத்திருந்தது. அனைவரும் அசைன்மென்ட்டை அழகுபடுத்திக்கொண்டு இருந்தார்கள். எனக்கு லேசாக ஜுரம் வந்துகொண்டிருந்தது. பேசாமல் வயிற்றுவலி என்று லீவாவது போட்டிருக்கலாம். இந்த டீச்சர் இன்று என்னை கிழித்து சென்றமுறை போல் ஹெட்மாஸ்டரிடம் அழைத்துச்சென்றுவிடுவாள். சரியாக Tom-இடம் வால் மாட்டிய Jerry-யாக உணர்ந்தேன்.

பள்ளியில் மணியடித்தது என் வயிற்றுக்குள் அடித்தது.

ஆனால் மணி அடித்தபின் தான் தெரிந்தது இன்று டீச்சர் லீவ் என்று. பிறகென்ன முதல் பீரியடே விளையாட்டுதான். இல்லை இல்லை இன்றாவது முடிக்கவேண்டும்.

குழந்தைபோல் ஹெட்மிஸ்ட்ரஸ் கொடுத்த இன்ஸ்பெக்‌ஷனுக்கான அசைன்மெண்ட்டை முடிக்காமல் லீவ் போட்டதை அம்மா  கிண்டல் செய்ய,

சிரித்தாள் டீச்சர்.

சர்வேசன்500 – ‘நச்’னு ஒரு கதை 2009 – போட்டி

குழப்பத்துக்கு மன்னிக்கவும். கதையில் எதிர்பார்த்த நச் ஃபேக்டர் வராததால், முடிவை லேசாக மாற்றி இருக்கிறேன். நீங்கள் இப்படி பார்த்தது புதிய முடிவு. அந்த இடத்தை கீழ் உள்ள வரிகளால் மாற்றினால், உங்களுக்கு பழைய முடிவு கிடைக்கும் :)

பழைய முடிவு:

இன்னும் 5 நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தபோது ஆரம்பித்த தும்மல் நிற்காமல் வந்தது.

அடுத்த அரை மணிநேரத்தில் அம்மா ‘ஏன்டி அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட?’ என்று கேட்டபோது ‘ஏதோ பன்னிஜுரம்’ என்று ஏதோ தெரியாத விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.

This entry was posted in Story and tagged , , . Bookmark the permalink. Post a comment or leave a trackback: Trackback URL.

26 Comments

  1. Posted October 11, 2009 at 2:50 am | Permalink

    nice :)

    thanks for participating.

  2. Posted October 11, 2009 at 9:01 pm | Permalink

    சுமை எவ்வளவு விரைவாக ஒருவரின் தலைக்குள் ஏற்றப்படுகிறது என அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

  3. கிஷோர்
    Posted October 12, 2009 at 9:47 am | Permalink

    நன்றி சதங்கா

  4. கிஷோர்
    Posted October 12, 2009 at 9:47 am | Permalink

    நன்றி சர்வேசன் :)

  5. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:48 pm | Permalink

    போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

  6. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:55 pm | Permalink

    இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

  7. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:55 pm | Permalink

    //——————————-// நான் ரசித்த வரிகள்

  8. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:56 pm | Permalink

    நல்ல எழுத்து நடை!

  9. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:56 pm | Permalink

    நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

  10. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:57 pm | Permalink

    சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

  11. ஜெகதீசன்
    Posted October 13, 2009 at 2:59 pm | Permalink

    நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

  12. Posted October 18, 2009 at 4:19 am | Permalink

    Super Katha… Nalla nadai unga Kathai la…

    Ithu namma Katha… Padichittu oru karuthu sollunga…
    http://nellainanban.blogspot.com/2009/10/blog-post.html

  13. Posted October 20, 2009 at 7:26 am | Permalink

    கதைக்கரு நடை ஆரம்பம் முடிவு எல்லாமே பிரமாதம்!

  14. கிஷோர்
    Posted October 20, 2009 at 12:12 pm | Permalink

    நன்றி ஷைலஜா

  15. கிஷோர்
    Posted October 20, 2009 at 12:12 pm | Permalink

    நன்றி ராம்குமார் அமுதன். உங்கள் கதையை படித்துப்பார்க்கிறேன் :)

  16. Posted October 22, 2009 at 5:59 pm | Permalink

    கதையை அழகாய் நகர்த்திச் சென்று அருமையாய் முடித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் கிஷோர்!

  17. Posted October 22, 2009 at 11:38 pm | Permalink

    கதையை fine tune பண்ணனுமோ? எது”திடீர்” திருப்பம். சாப்ட்வேர் இளைஞசன் என நினைக்க வைத்து கடைசியில் பள்ளி பெண்ணாக காட்டுவதா அல்லது பன்றி காய்ச்சலா?

    வாழ்த்துக்கள்!

  18. கிஷோர்
    Posted October 23, 2009 at 11:44 am | Permalink

    நன்றி ராமலக்‌ஷ்மி

  19. கிஷோர்
    Posted October 23, 2009 at 11:48 am | Permalink

    //கதையை fine tune பண்ணனுமோ? எது”திடீர்” திருப்பம். சாப்ட்வேர் இளைஞசன் என நினைக்க வைத்து கடைசியில் பள்ளி பெண்ணாக காட்டுவதா அல்லது பன்றி காய்ச்சலா? வாழ்த்துக்கள்!//

    நன்றி ரவிஷங்கர்.

    நீங்க சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். கதையை fine tune பண்ணனும்.

    சாஃப்ட்வேர் இளைஞன் போன்று காண்பித்து பள்ளிப்பெண்ணாக காட்டும்போதே கதை முடிந்துவிட்டது. ஆனால் என்னால் அந்த அளவுக்கு எஃபெக்டிவாக அந்த முடிவை கொடுக்க முடியவில்லை.

    கதை படிக்கும்போது யூகிக்க முடிவதுபோல் இருப்பதால் கடைசியாக அந்த செயற்கை பன்றிக்காய்ச்சல் முடிவு :(

  20. ஷக்திப்ரபா
    Posted October 23, 2009 at 12:28 pm | Permalink

    இன்னும் கொஞ்சம் செதுக்குங்க! பன்றிக்காய்ச்சல் எதோ problemக்கு solution போல் இருக்கிறது.

    நச்ன்னு இன்னும் முயலலாம்.

    வாழ்த்துக்கள்.

  21. கிஷோர்
    Posted October 23, 2009 at 1:12 pm | Permalink

    நன்றி ஷக்திப்ரபா,
    கொஞ்சம் செதுக்கணும்தான். :)

  22. Posted October 27, 2009 at 3:35 pm | Permalink

    அசைன்மென்ட் செய்வது பள்ளிக்காலத்துலயே எனக்கு பிடிக்காது. அந்த கணங்களுக்கு கொஞ்ச நேரம் போய் வந்தது போல இருந்தது. நன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் கிஷோர் !

    ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)
    http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html

  23. vidhoosh
    Posted October 31, 2009 at 8:01 pm | Permalink

    nice story kishore.
    best wishes.

    -vidhya

  24. கிஷோர்
    Posted November 13, 2009 at 11:11 am | Permalink

    நன்றி அரவிந்தன். உங்கள் கதையை படிக்கிறேன்

  25. கிஷோர்
    Posted November 13, 2009 at 11:11 am | Permalink

    நன்றி வித்யா

  26. Parames
    Posted November 19, 2009 at 2:34 pm | Permalink

    கதை நல்ல நச்சுனு கொடுத்து இருக்கிங்க..
    நான் தான் கொஞ்சம் குழம்பிட்டேன்..

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *

*
*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Subscribe without commenting