ட்விட்டர் பற்றி நிறைய எழுதிப்பட்டுவிட்டது. ஆனாலும் சிலருக்கு அதை உபயோகிப்பது சற்று கடினமாக இருக்கிறது. அதனால் ஒரு குட்டி அறிமுகம்.
ட்விட்டர் ஒரு மைக்ரோ ப்ளாக், நாம் நினைப்பதை 140 எழுத்துகளுக்குள் சொல்ல ஒரு தளம். அந்த 140 எழுத்துக்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக அந்த 140 எழுத்துகள் “இப்போது நீ என்ன செய்கிறாய்?” என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டு ட்வீட்.
”இந்த மழைத்தொல்ல தாங்க முடியல யாராவது ஒரு தம் கடன் கொடுங்களேன்”
இது உங்களது அந்த நிமிடத்தின் நினைப்பு. மேலும் ட்விட்டரை விளம்பரம் (”என் பைக் அட்டகாசமா இருக்கும். ஆனா விற்கப்போறேன்”), சமூக கருத்துக்கள் (”மழையில் நனையாதீர்கள், எனக்கு ஜூரம் வந்துடுச்சு”), மொக்கைகள் (”ஆஆஆஅவ்வ்வ்வ்வ் (கொட்டாவி)”) மேலும் மற்ற உங்கள் ட்விட்டர் ஃபாலோயர்களுடன் சாட்டும்(Chat) செய்ய பயன்படுத்தலாம்.
ட்விட்டரில் புழங்கும் சில வார்த்தைகள்:
Tweet:
140 எழுத்துக்குள் உங்களால் தெரிவிக்கப்படும் (குறுந்)தகவல்

Timeline:
உங்கள் ட்விட்டர் முகப்பு(Home Page), இங்கு உங்களுடைய மற்றும் நீங்கள் Follow செய்பவர்களின் Tweet-கள் இடம்பெறும்.
பொதுவாக இதன் URL, http://twitter.com/ – ஆக இருக்கும்

Followers:
யாருக்காவது உங்கள் ட்வீட்டுகள் பிடித்துப்போய், உங்கள் ட்விட்டுகள் அவர்களுடைய Timeline-ல் தெரிய உங்களை follow செய்தால், அவர்கள் உங்களது followers
Following:
உங்களுக்கு யாருடைய ட்வீட்டாவது பிடித்துப்போய், அவை உங்கள் Timeline-ல் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களை நீங்கள் follow செய்தால் அவர்கள் உங்கள் following
DM:
யாருக்காவது நீங்கள் ரகசியமாக/தனிப்பட்ட முறையில் தகவல் சொல்ல அவர்களுக்கு அனுப்புவது DM எனப்படும் Direct Message. ஆனால் நீங்களும் அவரும் ஒருவருக்கொருவர் ஃபாலோயராக இருந்தால் மட்டுமே DM அனுப்ப முடியும். இது உங்கள் DM -ஐ Spamகளிடம் இருந்து காக்கிறது. இதை யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர்களால் மட்டுமே படிக்க முடியும்
இதை அனுப்பும் வழிமுறை:
d <twiter_displayname> <message>
d kishorek உன் ஏரியாவுக்கு ஆட்டோ அனுப்பனும், உன் அட்ரஸ் என்ன?
Reply:
உங்கள் Timeline-ல் இருந்து ஏதாவது ஒரு Tweet-க்கு பதில் அளிக்க விரும்பினால், அந்த ட்வீட்டில் இருக்கும் Reply -ஐ க்ளிக் செய்து அனுப்பும் tweet. இது எந்த ட்வீட்டிற்கு பதில் அளிக்கிறீர்களோ அந்த ட்வீட்டை கண்டறிய உதவும். அல்லது யாருக்கு பதில் அளிக்கவேண்டுமோ அவரது பெயரை @குறியீட்டுக்கு அடுத்து போட்டு அனுப்பலாம்.

எடுத்துக்காட்டு:
kishorek: என் எடை இந்த மாதம் 3 கிலோ கூடிவிட்டது.
இதற்கான reply:
@kishorek ♫ எந்த கடையில நீ அரிசி வாங்கற?
Mentions:
இதுவும் கிட்டத்தட்ட Reply மாதிரிதான். ஆனால் Reply போல் உங்கள் பெயர் முதலில் போடாமல் ட்வீட்டில் எங்காவது ஒரு இடத்தில் போடப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த ட்வீட்டில் சொல்லப்பட்டிருக்கும் அனைவருக்கும் அந்த ட்வீட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
எடுத்துக்காட்டு:
நேத்து என் கனவுல @trisha @shreya ரெண்டு பேரும் செம சண்ட போட்டுக்கிட்டாங்க
Spam:
திடீரென்று உங்கள் Follower list-ல் ஒரு 10 பேர் கூடிவிட்டால் சந்தோஷப்படாதீர்கள். அவர்கள் Spam-களாக இருக்கலாம். இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளத்தேவை இல்லை. ஆனால் அவர்களை திரும்ப Follow செய்து தொலைக்காதீர்கள். தமிழில் Spam அனுப்பும் அளவு யாரும் வரவில்லை.
RT: Retweet. ஏதாவது ஒரு ட்வீட் உங்களுக்கு பிடித்துப்போய் அதை நீங்கள் உங்களுடைய Follower-களுக்கு பரப்ப நினைத்தால் அது Retweet.
எடுத்துக்காட்டு:
RT: @kishorek எனக்கு மீன்குழம்பு சாப்பிட வேண்டும்
Hash tag:
உங்கள் Tweet-ஐ வகைப்படுத்த # குறியீட்டை தொடர்ந்து உங்கள் Tweet-ஐ வகைப்படுத்தலாம். இதன் மூலம் அதே தலைப்பில் உள்ள மற்ற தகவல்களை தெரிந்துகொள்ள அந்த வார்த்தையில் ஒரு கிளிக் செய்தால் போதுமானதாக இருக்கும்.
எ-டு:
எனக்கும் தேதி நெருங்க நெருங்க பயமாத்தான் இருக்கு #வேட்டைக்காரன்
Trending topics:
ட்விட்டரில் பலர் ஒரே விஷயத்தை பற்றி பேசும்போது அது அந்த நேரத்தைய புகழ்பெற்ற ஒரு விவாத தலைப்பாகிறது. எடுத்துக்காட்டாக மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது, MJ, RIP MJ, Thriller போன்ற வார்த்தைகள் பலரால் Tweet செய்யப்பட்டு Trending topic-ல் இடம் பிடித்தன. இதன் மூலம் ஒரு பொது அலையைக்கூட உருவாக்கமுடியும்.

Fail Whale:
’முடியல’ என்று ட்விட்டர் சொல்லும்போது ஒரு திமிங்கிலத்தை பல பறவைகள் தூக்கிச்செல்லும் படம் வெளியாகும். இதுவே Fail Whale எனப்படுகிறது. ட்விட்டர் அதன் திறனை மிஞ்சி பலு சுமக்கும்போதும், ட்விட்டரில் தொழில்நுட்பக்கோளாறுகள் ஏற்படும்போதும், இது நடக்கும்.

List:
இது ஒரு குழப்பமான ஒரு விஷயம். மற்ற விஷயங்கள் உங்களுக்கு எளிதாகும்போது இது புரியும்
ட்விட்டரில் தற்சமயம் பல தமிழ் எழுத்தாளர்கள், ரைட்டர்கள், டாக்டர்கள், சச்சின் ரசிகர்கள், சச்சின் எதிரிகள், இளையராஜா ரசிகர்கள், ரஹ்மான் ரசிகர்கள் என பலதரப்பட்ட வகையினர் இருப்பதால் நன்றாய் பொழுது போகிறது.
தமிழ் ட்விட்டர்கள் அனைவரையும் ஒரே க்ளிக்கில் Follow செய்ய:
http://tweepml.org/Thamiz-Twitterers/
உபயம்: @icarusprakash
நான் ட்விட்டரில் – @KishoreK
9 Comments
Anputan
சிங்கை நாதன்
அன்பின் கிஷோர்
தகவலுக்கு நன்றி – பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் – நல்வாழ்த்துக்ள்
நன்றி சிங்கைநாதன் அண்ணே
நன்றி திரு சீனா
Romba nandri pa. Ennai maadri vayasaanavangaluku idhu oru nalla intro
Yah! twitter notes are very useful.
thanks too the team, thanks @kishorek.
I’m priyan.
நன்றி Malarpriyan
நன்றி ஜேக்