
The Boat That Rocked
செய்வதற்கு ஏதுமற்று இருந்த ஒரு ஞாயிறு மதியம் The Boat That Rocked படத்தை பார்க்க நேர்ந்தது. 1960களில் Rock n Roll, POP இசைக்கு BBCயில் இருந்த தட்டுப்பாட்டை(தினமும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவு) எதிர்த்து இசை மீதான மோகத்தால் திருட்டுத்தனமாக பல வானொலி நிலையங்கள் செயல்பட்டன. அதைப்போன்ற கற்பனையான ரேடியோ ராக் என்ற கப்பல்மீது இருந்து செயல்படும் வானொலி நிலையம் பற்றிய கதை இது.
அந்த காலத்தில் இத்தகைய வானொலி நிலையங்களுக்கும் அரசுக்கும் நிகழ்ந்த போரை கற்பனை ஏற்றி, இசையில் நிரப்பி அதற்கிடையில் அந்த வானொலி அறிவிப்பாளர்களின் வாழ்க்கையை சொல்லிச்செல்கிறது படம்.
கப்பல் மீதிருந்து 20 மில்லியன் மக்களை மீடியம் வேவ் அலைவரிசையில் கட்டிப்போடுகிறது ரேடியோ ராக். ஆனால் அரசாங்கத்திற்கு இது பிடிக்காமல், அவர்களை ஒழித்துக்கட்ட போராடுகிறது. இதற்கிடையில் ஒரு இளைஞன் அவனது அம்மாவால் கப்பலுக்கு உலக அனுபவத்திற்காக அனுப்பி வைக்கப்படுகிறான். விரைவில் அவன் அந்த கப்பலில் இருந்த அனைவருக்கும் பிடித்தவனாகி விடுகிறான். கப்பல்-இசை-வானொலி என்று செல்லும்போது, இறுதியாக அரசு சட்டம் இயற்றி அனைத்து திருட்டு வானொலி நிலையங்களையும் மூட உத்தரவிடுகிறது. ஆனால் அடங்க மறுத்து, விடாமல் வானொலி இயங்குகிறது, இதன்பின் நடக்கும் உணர்வுப்போராட்டங்களை படத்தில் காணுங்கள்.
படத்தில் ரசித்த சில விஷயங்கள்:
- படம் முழுக்க வரும் இசை. இசைக்காக தனியாக மெனக்கெடாமல், வானொலியை பயன்படுத்தி அந்தந்த நிகழ்விற்கேற்ற புகழ்பெற்ற பாடல்களை பிண்ணனியாக ஒலிக்கின்றனர். கிட்டத்தட்ட 60 பாடல்கள் இப்படி படம் நெடுக வருகின்றன.
- ஒவ்வொரு வானொலி அறிவிப்பாளருக்குமான தனித்தன்மைகள்
- விடிகாலை நிகழ்ச்சி நடத்தும் பாப் என்பவரை, கப்பலில் இருக்கும் பலருக்கு தெரியாமல் இருந்து திடீரென அவரைப்பார்க்கும் காட்சி
- பெண்களே இருக்கக்கூடாது என்பது கப்பலின் விதி, ஆனாலும் ஒரே ஒரு சமையல் பெண்ணை அவள் லெஸ்பியன் என்ற காரணத்திற்காக விட்டுவைத்திருப்பது
- கப்பலில் நடக்கும் கல்யாணத்தை, நேரடி வர்ணனை செய்ய அதை மக்கள் ரசிப்பது
- கப்பலுக்கு வரும் இளைஞன் தன் கன்னித்தன்மையை இழப்பதும், அதையும் வானொலியில் 20 மில்லியன் மக்களுக்கு நேரடி வர்ணனை செய்வது
- F* வார்த்தையை வானொலியில் முதன்முதலாக சொல்லும் காட்சி
- படத்தின் இறுதிக்காட்சி
2 Comments
இதே படம் இப்போது தான் யூ.எஸ்ஸில் ‘பைரேட் ரேடியோ’ என்ற பெயரில் த்யேட்டர்களில் வெளியானது. படத்தோட டி.வி.டி வந்து பல நாள் ஆனப்புறம் த்யேட்டர்ல வந்தா என்ன வரலைன்னா என்ன்? விமர்சனம் எழுதும் போது இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுத முயற்சி செய்யுங்கள்…
நன்றி பிரசன்னா.
Wikipedia-விலும் IMDB-லும் கிடைக்கும் தகவல்களை மொழி பெயர்த்து இடுகையை பெரிதாக்க விரும்பவில்லை. அதே போல் படம் பார்த்த உணர்வுகளைத்தான் பிரதிபலித்திருக்கிறேன். இது விமர்சனம் அல்ல