சூரியன் எஃப்.எம் முதல் வாயாடி ரோஹிணி வரை

சூரியன் எஃப்.எம்மை அனைவரும் மாய்ந்து மாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தபோது, கல்லூரிகாலத்தில் நாங்கள் மயங்கிக்கிடந்தது ரேடியோ மிர்ச்சிக்கு. திருவண்ணாமலையில் அப்போது எஃப்.எம் சரியாக கிடைக்காது. வெயில் வரும்வரை நன்றாக எடுக்கும். இதற்காக தனி ஆண்டனாவெல்லாம் பொருத்தி ஓரளவுக்கு ஒப்பேற்றிக்கொண்டிருந்தோம்.

சூரியன் எஃப்.எம் சன் மியூசிக்போல எப்போதும் தொலைபேசிக்கொண்டே இருந்தனர்(கின்றனர்). அது ஒரு எரிச்சல் தரும் ஒரு அனுபவம். எ‍-டு: கீட்டு மாமா சூசி மாமி, சின்ன மாப்ளே பெரிய மாப்ளே… ஆனால் கோவை சூரியன் எஃப்.எம்மில் லக்ஷ்மிநாராயணனும், சென்னை சூரியன் எஃப்.எம்மில் காற்றுமண்டலத்தை கற்கண்டு மண்டலமாக்கும் யாழ்சுதாகரும் இதில் விதிவிலக்கு.

காலையில் சந்தோஷமாக எழ உதவிக்கொண்டிருந்தது சுச்சியின் “ஹல்லோ சென்னை” என்ற வார்த்தைகள்தான். அவரது உற்சாகத்தை அனைவருக்கும் பரப்பிவிடுவதில் கில்லாடி. அவர் பச்சக்கிளி பச்சையம்மா(கிளி ஜோசியம்) என்று சொல்வதே அழகாக இருக்கும். பிற்காலத்தில் மிர்ச்சி கேட்க முடியாத இன்றைய காலகட்டங்களில், வெறுமனே அவரது குரலை “அம்மாடி ஆத்தாடி” என்றே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

காலையில் சுச்சி என்றால், இரவில் சிவாவின் காதல் டாக்டர் நிகழ்ச்சி. சென்னை 28இல் குழந்தைக்கு கவிதை சொல்லி அழவைப்பவரேதான். இவரும் இவருக்கென்று ஒரு தனிபாணியில் நிகழ்ச்சி நடத்துபவர். நல்ல நல்ல காதல் பாடல்களை போட்டு உறங்க வைப்பவர். இவரது நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது ஒரு இசை வரும். அது என்ன இசை என்று நீண்ட நாட்கள் தலையைப்பிய்த்துக்கொண்டிருந்தோம். கடைசியில் அது காதல் கொண்டேன் படத்தில் வரும் ஒரு பிட் என்று தெரிந்தது.

மிர்ச்சியில் ஒருமுறை வித்தியாசமாக மொட்டை மாடியில் இருந்தெல்லாம் நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்றைக்கு மிர்ச்சியின் நிலை தெரியவில்லை. கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

தற்சமயம் loka.fm உபயத்தால், சூரியன் எஃப்.எம், ஆஹா எஃப்.எம் மற்றும் ரேடியோ சிட்டியும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சூரியன் எஃப்.எம் எப்போதாவது நம்மூரை ரொம்ப மிஸ் செய்யும்போது கேட்கிறேன். (ஆனால் இன்னும் திருந்தவில்லை). ரேடியோ சிட்டியில் கோபிக்காக சில நாட்கள் கேட்டேன். அவரையும் ரேடியோ கெடுத்து வைத்திருக்கிறது. மேலும் விஜய் ஆண்டனியின் குத்து பாடல்களை அளவுக்கதிகமாக ஒலிபரப்புவதால் தலைவலியில் இருந்த தப்பிக்க அதை கேட்பதை நிறுத்திவிட்டேன்.

ஆஹா எஃப்.எம் மட்டுமே என்னை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்ல நகைச்சுவை உணர்வு உள்ள மக்களால் நடத்தப்படும் இந்த அலைவரிசையில் சில நல்ல நகைச்சுவை நிகழ்ச்சிகள் வருகின்றன(வெட்டிமன்றம், பவர் விஜயின் கோல்மால்). இடையிடையே அவர்கள் போடும் மிமிக்ரிகளும், விளம்பரங்களுமே படு கலக்கல்.

தீபாவளிக்காக ஆஹா எஃப்.எம்மில் போடப்பட்ட சில விளம்பரங்கள்:

1. பசங்க படத்தின் ரீமேக் :)

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

2. குப்பம்மா

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

3.  தெருச்சண்டை

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

இந்த விளம்பரங்களில் வரும் பெண் குரல் ரோஹிணியினுடையது. இவர் ஒரு செம வாயாடி என்று சொன்னால் மிகையல்ல. இவரிடம் வாயைக்கொடுத்தால் மீள முடியாது. இவரது புகழ்பெற்ற நிகழ்ச்சி அப்படிப்போடு. எனக்கு தெரிந்து இவரிடம் எப்படி பேசினாலும் பதிலடி கொடுத்து விடுகின்றார். கொஞ்சம் அப்படி இப்படி பேசினால் கூட உடனே சமாளித்து கொடுக்கும் இவரது பதிலடி, இவர் அரசியலுக்கு ஏற்றவர் என்று நிரூபிக்கிறது :) கீழே இருப்பவை இவரது அப்படிப்போடு நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

அடுத்து குறிப்பிடப்படவேண்டியவர் பவர் விஜய். இவர் நடத்தும் கோல்மாலும் ஒரு அடிபொலியான நிகழ்ச்சி. ஏதாவது ஒரு சூழ்நிலையைக்கொடுத்து பேசுபவர்களை அந்த நிலைக்கு ஏற்றவாறு பேசவைத்து போட்டு வாங்குபவர். இதுவும் கண்டிப்பாக கேட்கவேண்டிய ஒரு நிகழ்ச்சி. எல்லோரையும் தல தல என்று அழைக்க ஆரம்பித்து கலாய்த்து தள்ளி விடுகிறார்.

ஆஹா எஃப்.எம்மின் இன்னொரு முத்து மிமிக்ரி செந்தில், இவர் லியோனி போல் காலையில் நடத்தும் வெட்டி மன்றம் நிகழ்ச்சியும் இன்னொரு காமெடி வெடி.

பின்குறிப்பு:
வாயாடி என்ற சொல்லாடல் பாராட்டும் விதத்திலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது

This entry was posted in Experience and tagged , , , , , , . Bookmark the permalink. Post a comment or leave a trackback: Trackback URL.

2 Comments

  1. Posted December 4, 2009 at 3:00 pm | Permalink

    நல்லா இருக்கு! நானு 2003 வாக்குல சூரியன் எப்.எம் திருநெல்வேலி ஆரம்பிச்ச டைம்ல மொட்டைமாடியில ஆண்டெனாவெல்லாம் செட் பண்ணி பாட்டு கேட்ட பய! :) இரவு 9.00 மணிக்கு ஒருத்தரு போன்ல பேசி பாட்டு போடுவாரு – யாழ் சுதாகர் – ரேஞ்சுக்கு அவுருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இப்ப பேர் மறந்துப்போச்சு :( அவுரு குரல்தான் ஞாபகம் வந்துச்சு!

    ஆடியோ தொகுப்பு பலே! :)

  2. கிஷோர்
    Posted December 4, 2009 at 3:34 pm | Permalink

    நன்றி ஆயில்யன். :)

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *

*
*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Subscribe without commenting