மிகச்சிறந்த வரிகளை கொண்ட ஒரு பாடல்

இப்பாடலின் வலியும் ஆனந்தமும் ஒரு அயல்நாட்டில் இருந்து சொந்த நாட்டை நினைத்து உருகுபவனால் மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
மேலும் ரஹ்மானின் குரல் ஒரு விதமான உணர்ச்சியை கொடுக்கும் இனிய‌ குரல். அது சில இடங்களில் சிறப்பாக பயன்படுத்தபடுகிறது. சில இடங்களில் அய்யோ(எல்லா புகழும்… ATM-‍லிருந்து)

(இப்போது அஸ்லாமின் குரல் கூட அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. அதை பற்றி இன்னொரு பதிவில்)

அப்படி எல்லாமே நன்றாக சேர்ந்து வந்த ஒரு பாடல் இது. தேசம் படத்தில் இருந்து.

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்கிறது தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா?
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள்மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க‌
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க‌
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க‌
கட்டி காத்த உறவுகள் அழைக்க‌
நீ தான் தின்ன நிலாச்சோறு தான் அழைக்க‌

பால் போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சில குறை இருக்கும்
மலர் போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலி இருக்கும்
க‌ண்ணீர் துடைக்க வேண்டும் உந்த்ன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா

Posted in Uncategorized | Tagged | 2 Comments

தமிழ்மணம்

குறைந்தது 3 பதிவுகளாவது வேண்டுமாம் பதிவு செய்துகொள்ள.
என்ன செய்வதென்று தெரியவில்லை பார்க்கலாம்…

அதற்காக இந்த கொசுறு பதிவு

Posted in Uncategorized | Tagged | Leave a comment

கடவுளுடன் ஒரு பேட்டி

ஒரு இணையத்தளத்தில் நான் கண்ட ஒரு நல்ல article-ன் தமிழாக்கம்

ஒரு நாள், நான் கடவுளை பேட்டி காண்பதாய் நல்ல கனவு கண்டேன்.

“ஆக, நீ என்னை பேட்டி எடுக்க முடிவு செய்து விட்டாய்”, என்றார் கடவுள்.

“உங்களுக்கு நேரம் இருந்தால்…”, என்றேன் நான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, “என் நேரம் முடிவில்லாதது, என்ன கேள்விகளை யோசித்து வைத்திருக்கிறாய்? “, என்றார்.

“மனிதகுலத்தை பற்றி உங்களை எது வியக்கவைக்கிறது?”

“குழந்தை பருவத்தில் சலிப்படைந்து வளர ஆசைப்படுகிறார்கள், வளர்ந்ததும் மீண்டும் குழந்தையாக நினைக்கிறார்கள்”

“செல்வம் சேர்க்க, உடல் ந‌லத்தை அடகு வைக்கிறார்கள். பின்பு அதை மீட்டெடுக்க செல்வத்தை செலவழிக்கிறார்கள்!”

“வருங்காலத்தை பற்றிய பரபரப்பில், நிகழ்காலத்தை தொலைக்கிறார்கள். ஆனால் இரு காலத்தையுமே வீணடிக்கிறார்கள்”

“இறக்கவே போவதில்லை என்பது போல் வாழ்கிறார்கள், ஆனால் மாண்டபின் மீள்வதில்லை”

நிஜம் என்னை சுட்டது. நான் சற்று அமைதியானேன்

“…சரி உங்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

இதற்கு பின் வந்த பகுதிகள் அவ்வளவாக கவரவில்லை. எனவே, மாற்றம் செய்து உள்ளேன்

“எப்போதும் அவர்களுக்கு நான் இருக்கிறேன் அனைவருக்கும், எந்த வழியில் வந்தாலும், எல்லா வாசலிலும், என்று”

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Posted in Uncategorized | Tagged , | 4 Comments

நானும் பதிவிடுகிறேன்

எங்கோ வெடிக்கும் குண்டுகளின் அதிர்வுகள்
தாய்நாட்டை தேடி அலையும் சில குரல்கள்
தன்னாட்டை தொலைத்து கொண்டிருக்கும் சிலர்
எல்லோரையும் வம்புக்கிழுக்கும் தெம்பு
ஜாதியையும் மதத்தையும் பேண்ட்விட்த்துக்குள் இழுத்துவிட்ட மேதாவிமடத்தனம்

இப்படி வலைப்பதிவில் எல்லாம் இருக்க
இனி, நானும் பதிவிடுகிறேன்

Posted in Uncategorized | Tagged | 2 Comments