Tag Archives: கவிதை பவன்

கடலின் நடுவில் ஒரு புள்ளி

மேகத்திற்கு மேல் சென்றுகொண்டிருந்தபோது
வெகு கீழே ஒரு புள்ளியைப்பார்த்தேன்
புள்ளி கடலின் நடுவில் இருந்ததாலும்,
மேகங்கள் சற்று இடைவெளி விட்டிருந்ததாலும்,
என்னால் அந்த புள்ளியைப்பார்க்க முடிந்தது.
புள்ளி கப்பல் என்று அழைக்கப்படுவதோ
புள்ளிக்குள் மனிதர்கள் இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதோ
என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை
நாத்திகர்களுக்கு ஆத்திகர்களின் கடவுள் போல‌
புள்ளி என்பதால் மேகம் எளிதாக மறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது
அல்லது நான் மேகத்தைத்தாண்டி சென்றுகொண்டிருந்தேன்

Posted in Poem | Also tagged | Leave a comment

பின்நவீனத்துவப் பிதற்றல்

பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு
வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.நன்றி திரு.பாதசாரி
மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது
எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் [...]

Posted in Poem | Also tagged | 4 Comments

கவிதைபவன்(1) – பேருந்து

இடம் (1)இந்த இடமில்லா பேருந்தில் ஏறுகிறாரே இந்த பெரியவர்எங்கே உட்காருவாரோ!சரி நான் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன்.நான் இறங்க நேரம் இருக்கிறது
இடம் (2)
எனக்கும் தான் வயதாகிக்கொண்டிருக்கிறது.கால் வலி மூட்டு வலி வருகிறது.10வது படிக்கும் பையன் இருக்கிறான்நான் ஏன் இந்த பெரியவருக்கு இடம் தர வேண்டும்?
நோக்கம்
பக்கவாட்டு சீட்டில்துறுதுறு குழந்தைஅழகாய் சிரிக்கின்றதுகவனத்தை பலமாய் ஈர்க்கின்றதுசேலை விலகிய அதன் அம்மாவை விட‌

====================================================
ஹைக்கூ
தாகம்
பேருந்துக்கு வெளியில்
நல்ல வெயில்
பசுவின் நாக்கில் வழிகிறது உமிழ்நீர்
முடி
கூட்டமில்லா பேருந்தில்
எல்லார் காலிலும் மிதிபடுகின்றது
ஒரு நீள முடி

Posted in Uncategorized | Also tagged , | 4 Comments